Education
கோவை வேளாண் பல்கலையில் இணைய வழி கலப்புக்கல்வி அறிமுகம்!
SimpliCity News Team · 14 Sept 2023
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணையவழி கலப்புக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இணையவழி கலப்புக் கல்வி திட்டம் 13.09.2023 அன்று நடைபெற்ற கல்விசார் மேலாண்மை அமைப்பு கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின் படி ஒரு குறிப்பிட்ட பாடத்தினை குறிப்பிட்ட நேரத்தில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கலலூரிகளிலும் பயிலும் மாணவர்கள் ஒரே குடையின் கீழ் கற்பிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இக்கருத்தரங்கினை வேளாண் பல்கலைக்கழக முதுகலை முதன்மையர் முனைவர் ந.செந்தில் வரவேற்றார். இத்திட்டம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.கீதாலட்சுமி விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
துணைவேந்தர் உரையில் கூறியதாவது, இத்திட்டம் இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் இணையவழி கல்வியை அளிக்கும் மோக், ஸ்வாயம், நெப்டெல் போன்றவற்றிற்கு மாற்றாக விளங்கிடும்.
முதற்கட்டமாக வேளாண் மற்றும் தோட்டக்கலை இளங்கலையில் நான்கு பாடங்களில் இந்தியளவில் முன்னோடியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டைய பாடங்களில் சுமார் 10 சதவீத வரை இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுதில்லி இந்திய வேளாண் ஆராயச்சி கழக முனைவர் ஆர்.சி.கோயல், இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கிற்கான சிறப்புரை இந்திய வேளாண் ஆராயச்சி கழக இயக்குநர் முனைவர் இராஜேந்திர பிரசாத் மற்றும் திட்ட இயக்குநர் முனைவர் சந்தீப் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் ஐம்பதுக்கு மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 250-ம் மேற்பட்ட மாணவர்கள் நேரிடையாகவும் 500-ம் மேற்பட்ட மாணவர்கள் இணையவழியாகவும் பயன்பெற்றனர்.
இத்திட்டங்களின் செயல் விளக்கங்கள் மணிஸ் மற்றும் உத்கர்ஸ் செய்து காண்பித்தார். இறுதியாக இளங்கலை வேளாண்மை முதன்மையர் முனைவர்.என். வெங்கடேச பழனிச்சாமி நன்றியுரை வழங்கினார்கள்.
Related stories
News
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை
5 days ago
News
வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி
10 days ago
News
கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை
11 Jul 2026
News
ஆராய்ச்சியாளர்கள் - தொழில்முனைவோர்கள் சந்திப்பு: உணவு தொழில் வளர்ச்சிக்கு TNAU-வில் ‘Connect & Grow’ நிகழ்ச்சி.
06 Jun 2026
News
உலக சுற்றுச்சூழல் தினம்: துணிப்பை தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
05 Jun 2026
News
TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு
25 May 2026